உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தேனியில் தன்னார்வலர் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் பாலா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்
அப்போது அவரிடம் அரசியல் பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோது, உதவி செய்தாலே அடுத்து அரசியலுக்கு வருகிறீர்களா? என கேட்கிறார்கள்
அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு அறவே கிடையாது. பல்வேறு இடங்களுக்கு சென்று என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்
அப்போது பலர் என்னிடம் உதவி கேட்டு மனுக்கள் அளித்து வருகின்றனர்.கடைசி வரை என்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்வேன் என்று பதிலளித்துள்ளார்.