மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) என்கவுண்டரில் தனது முடிவை சந்தித்தார்
இவரது வாழ்க்கை கதை 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸாக உருவாகியுள்ளது. இந்த சீரிஸை சரத் ஜோதி இயக்கியுள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14- ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
வீரப்பனின் பெரும்பாலான கதைகளை போலீஸ் மற்றும் ஊடகங்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால், இந்த சீரிஸில் வீரப்பனே தன் கதையைச் சொல்வதனால் சுவாரஸ்யம் கூடுகிறது.
6 எபிசோடுகளை கொண்ட இந்த சீரிஸில் சில புனைவுக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் கூட்டுகிறது. இதன் அடுத்த பாகத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.