உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் கிவி.
மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது இதில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன.
மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் கிவி பயன்படுகிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.
வைட்டமின் ஈ, சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு, பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையையும் உருவாக்குகிறது.
ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து கிவி பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களின் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கலாம்.
கிவி பழம், இனிப்பானது தான் என்றாலும், அதன் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவு.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போன்று விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணலாம்.
இதய தமணிகளில் ரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் சக்தி ‘கிவி’ பழத்துக்கு உண்டு.