நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர். திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் அவ்வபோது வெளியிட்டு வருகிறார்.
இதில், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர் விஜய் நேரில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். விஜய் பட்டு வேட்டி சட்டையில் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் திருமணத்தில் விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.