தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'.
லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது.
கார்த்தியின் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்த இந்த படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.