பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாம்மன்னன் திரைப்படத்தை இயக்கினார்.
தற்பொழுது வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் பைசன் திரைப்படத்திற்கு அடுத்து தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கப்போகிறார். அதைதொடர்ந்து கார்த்தியை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.