இயக்குனர் சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவிருக்கும் படம் “கங்குவா”
ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது
அதன்படி, அனிமல் திரைப்படத்தில் நடித்த பாபி தியோல் இப்படத்தில் நடித்திருப்பதாக அவரின் பிறந்த நாளன்று போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.