சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில். பல திரையரங்குகளில் முன் பதிவு தொடங்கி வேகமாக டிக்கெட் புக் செய்யப்பட்டு வருகிறது.
கேரளா மற்றும் பெங்களூரு பகுதியில் உள்ள திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் சிறப்பு காட்சியாக அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தமிழகத்தில் கங்குவா திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி அளித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கங்குவா திரைப்படம் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கும்