சிவகார்த்திகேயன் புரொடெக்‌ஷன் சார்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான திரைப்படம் கனா
கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு மிகப்பெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலரும் நடித்து இருந்தனர்
அந்த வகையில், இப்படத்தில் நடித்த கிரிக்கெட் வீராங்கனை சஜனா சஜீவன் இந்திய மகளிர் கிரிக்கெட் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்
வங்காளதேசம் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்க இருக்கிறது.