கமல்ஹாசன் தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக சென்றுக் கொண்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்குபவர் பிரபல ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவ் மாஸ்டர்.
இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.