'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் ஓடிடி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி- யில் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.