பிரபல நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மாடலிங் துறையைச் சேர்ந்த தாரினி என்ற பெண்ணை காதலிப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு காளிதாஸ் ஜெயராம் தெரிவித்திருந்தார்.
இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதால் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்த நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாஸ் ஜெயராமின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.