லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கி 2019-ம் ஆண்டு வெளியான படம் 'கைதி'. இத்திரைப்படத்தில் கார்த்தி மற்றும் நரேன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இத்திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதன்பின்பு தான், லோகேஷ் கனகராஜ் பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில், 'கைதி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியது- கார்த்திக் மற்றும் எஸ்.ஆர். பிரவுக்கு நன்றி. இவர்களால் தான் 'லோகேஷ் யுனிவர்ஸ்' சாத்தியமானது. விரைவில் டில்லி திரும்ப வருவார்," என குறிப்பிட்டுள்ளார்.