சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தின் நடித்துள்ளார். திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகவுள்ளது.
திரைப்படக்குழு நேற்று விசாகபட்டினத்தில் படத்தை ப்ரோமோட் செய்வதற்காக விழா நடத்தினர். அதில் சூர்யா, இயக்குனர் சிவா, சந்தீப் கிஷன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
அப்பொழுது சூர்யா அவர் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப்போகும் திரைப்படங்களின் தகவல்களை கூறினார்.
அதில் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள கைதி 2 திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.