இயக்குநர் ஹலிதா ஷமீம். `மின்மினி' என்ற படத்தை இயக்கியனார். எஸ்தர் அனில், கௌரவ் காளை மற்றும் பிரவின் கிஷோர் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமானின் மகளான கதீஜா ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலமே கதீஜா அவரது திரைத்துறை இசை பயணத்தை தொடங்கியுள்ளார்.
திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசையை பலரும் பாராட்டிருந்தனர்.
இந்நிலையில் கதீஜா ரகுமானுக்கு இந்தியா மீடியா வொர்க்ஸ் அமைப்பு சார்பில் இந்த ஆண்டின் சிறந்த அறிமுக இசை அமைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.