சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பதிவுகளை பகிர்ந்து வருகிறார்
இந்நிலையில் அவர் தனது கணவரான நடிகர் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்பட பதிவில், ரசிகை ஒருவர் “மேம் சூர்யா சாரை ஒருநாள் மட்டும் கடன் கொடுப்பீங்களா? நான் சூர்யா சாரோட மிகப்பெரிய ரசிகை” என்று பதிவிட்டிருந்தார்
அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோதிகா அந்த கம்மண்டிற்கு "ஊப்ஸ், நாட் அலோவ்டு" என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சீனை மையப்படுத்தியே அந்த ரசிகை இவ்வாறு கமண்ட் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.