34 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப்
ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம்ரவி, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக் உட்பட பல முக்கிய நடிகர்கள் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் கடந்த மாதம் இப்படத்திலிருந்து விலகினார்
அதைத்தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியும் தனது பிஸியான ஷெட்யூல் காரணமாக தற்போது இந்த படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது இது ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.