நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வசூல் பெற்றது
இதில் பிறமொழிகளில் இருந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடித்து இருந்தனர்
ஜெயிலர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது
இந்நிலையில் இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் அவரோடு பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.