நடிகர் ஜாக்கி ஜானிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் இவர் தனது 70வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்
முன்னதாக ஜாக்கி ஜானின் மிகவும் வயதான தோற்றமுடைய புகைப்படம் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவரை உடல்நலனை கவனித்துக் கொள்ள சொல்லி வருத்தம் தெரிவித்து வந்தனர்
இந்நிலையில் அந்த வயதான புகைப்படம் குறித்து ஜாக்கி ஜான் தனது பிறந்த நாளில் விளக்கமளித்துள்ளார்
அந்த புகைப்படம் வயதான தோற்றத்தில் நான் நடிக்க விருக்கும் புதிய படத்திற்கான தோற்றம் தான் அதனால் அதுகுறித்து யாரும் வருத்தமடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்