இன்ஸ்டாகிராம் சேவை உலகின் பல்வேறு பகுதிகளில் முடங்கியுள்ளதாக பயனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் காரணமாக செயலியில் வைத்து குறுந்தகவல் அனுப்ப முடியவில்லை என்று பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வலைதளங்கள் செயலிழப்பது குறித்து தகவல் வெளியிடும் டவுன்டிடெக்டர் இன்று மாலை 5.14 முதல் இன்ஸ்டாகிராம் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் மெட்டா நிர்வகித்து வரும் இன்ஸ்டா செயலி முடங்கியுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.