சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து ரசிகர்களால் எதிா்பார்க்கப்பபடும் திரைப்படம் இந்தியன் 2
இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் "பாரா" வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது
இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம் சரண் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.