தமிழ் சினிமாவின் பொக்கிஷம், முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் முதலில் இருப்பவர் இளையராஜா. இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
இந்தியாவில் முதன் முறையாக இளையராஜா வாலியண்ட் சிம்ஃபனி என்னும் இசையை உருவாக்கியுள்ளார்
"நான் இசையமைத்த பல பாடல்களில் நான் வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையை அறிமுகப்படுத்தி உங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். இசைத்துறையில் பல விஷயங்களை நான் உருவாக்கியுள்ளேன்"
"நீங்கள் கேட்ட உடனே நான் இசையை கொடுக்கனுமா? அப்படி கொடுத்தால் நான் சரவண பவன் ஆகிவிடுவேன்.என் இசையை கேட்டு குழந்தை உயிர் பிழைத்துள்ளது,இதைச் சொன்னால் அவருக்கு தலைகனம் மற்றும் கர்வம் அவருக்கு அதிகம் என கூறுவார்கள்."
எனக்கு வராமல் வேறு யாருக்கு வரும்? எனக்கு தான் டா வரணும் கர்வம். எனக்கு திமிரு அதிகமாதான் இருக்கும். உலகத்திலேயே யாரும் செய்ய முடியாததை நான் செய்துள்ளேன். அப்போ எனக்கு தானே திமிரு வர வேண்டும். இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.