மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா (102) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தமிழக அரசு "தகைசால் தமிழர் விருது" வழங்கி கவுரவப்படுத்தியது.
சமூக மாற்றத்துக்காக தொடர்ந்து போராடியவர் 'தகைசால் தமிழர்' சங்கரய்யா
இந்தி திணிப்பை எதிர்த்து ராஜாஜிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் சங்கரய்யா.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசை அழைத்து சுதந்திரப் போராட்டத்துக்காக கூட்டத்தை நடத்திய சிறப்பு சங்கரய்யாவுக்கு உண்டு.
1938-ம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்களுடன் போராட்ட பயணத்தை சங்கரய்யா தொடங்கினார்,1939-ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலித்தார்.