நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது.
இதில் ஹவுஸ்மேட்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதாவது காதராஜ் என்ற புனைபெயர் கொண்ட ஒரு கழுதையை ஹவுஸ்மேட்கள் பராமரிக்க வேண்டும். இதற்காக கழுத்தைக்கு அங்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ப்ரோமோ வெளியான நிலையில், சல்மான் கான் மற்றும் பிக் பாஸ் தயாரிப்பாளர்களுக்கு பீட்டா இந்தியா கடிதம் எழுதியுள்ளது.
அக்கடிதத்தில் விலங்குகளை பொழுதுபோக்குக்காக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இது விலங்குகளுக்கு மன அழுத்தம் மற்றும் பார்வையாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் ஆகையால் கழுதையை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.