தனியார் தொலைக்காட்சியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் சீசன் 8' கடந்த ஞாயிறு அன்று கோலாகலமாக துவங்கியது.
அதே நாளில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியும் தொடங்கியது.
அந்நிகழ்ச்சியில் முதல் முறையாக தமிழகத்தைச் சார்ந்தவரும், நடிகையுமான ஸ்ருதிகா அர்ஜுன் பங்கேற்றுள்ளார்.
2006 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தி பிக்பாஸ் சீசன் 1 முதல் இதுவரை நடந்த எந்தவொரு சீசனிலும் தமிழகத்தைச் சார்ந்தவர் பங்கேற்றது இல்லை.
ஆனால் அப்பிம்பத்தை உடைத்து ஒரு தமிழ் நடிகை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.