தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணியில் இருந்து வரும் நடிகைகள் நயன்தாரா மற்றும் திரிஷா
நயன்தாரா அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா தக் லைப் மற்றும் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார்
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக வலம் வரும் இருவருமே ஒரு படத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி சம்பளமாக பெற்று வருகிறார்களாம்
ஆனால் இவர்களையே கன்னடத்து பைங்கிளியான ராஷ்மிகா முந்திவிட்டது தான் தற்போது சினிமாவில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் 'சிக்கந்தர்' படத்தில் நடிக்க ராஷ்மிகா ரூ.15 கோடி சம்பளமாக கேட்டு ரூ.13 கோடி வரை சம்பளம் வழங்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.