மலையாள திரையுலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் லிஜின் ஜோஸ். இவர் ஃபரைடே, லா பாயிண்ட் மற்றும் சேரா ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார்.
இவர் தற்போழுது ஹெர் {Her} என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டு வருடத்திற்கு முன்பே உருவாக்கப்பட்ட இப்படம் நேரடி ஓடிடி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இப்படம் பிரபல ஓடிடி தளமான மனோரமா மாக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படம் 5 பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது.
இதில் ஊர்வசி, ஐஷ்வர்யா ராஜேஷ், பார்வதி திருவோத்து, லிஜோமோல் ஜோஸ் மற்றும் ரம்யா நம்பீசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.