திரையுலகில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என பல பரிணாமங்களை கொண்டவர் தனுஷ். இவர் ராயன் படத்தைத் தொடர்ந்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படம் இம்மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன.
இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜி.வி பிரகாஷ் " தனுஷ் சார் இயக்கும் திரைப்படத்தில் முதல்முறையாக வேலைப் பார்க்கிறேன். கண்டிப்பா ஒரு மேஜிக் ஏற்படும்.
படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரேயாஸ் சொன்னாரு இப்படத்தின் இசையமைப்புக்கு நான் சம்பளம் என எதுவும் வாங்கவில்லை என்று. ஜெயிலர் திரைப்படம் ஹிட்டானதும் படக்குழுவை அழைத்து பரிசு வழங்கியதுப் போல் இப்படம் வெளியானதும் என்னை ஸ்பெஷலாக கவனிக்க வேண்டும்." என மிக நகைச்சுவையாக கூறினார் .