நடிகர் விஜய்-திரிஷா நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'கில்லி'
படத்தில் பிரகாஷ்ராஜின் வில்லன் கேரக்டர் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது. இப்படம் 2001-ல் வெளியான பிரெண்ட்ஸ் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது
நடிகர் விஜய்-யின் சினிமா கேரியர்களில் சிறந்ததாக இன்றளவும் பேசப்படும் படமாக கில்லி உள்ளது
இந்நிலையில், 'கில்லி' படம் வருகிற ஏப்ரல் 27- ந்தேதி மீண்டும் 'ரீ ரிலீஸ்'(மறு வெளியீடு) செய்யப்படும் என தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.