தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன்.
இன்று நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டியின் போது தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவுதம் வாசுதேவ் மேனன், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கவுதம் வாசுதேவ் மேனன், கிரிக்கெட்டை மையமாக கொண்டு புதிய படம் இயக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் காம்ப்ளியை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.