ஆரம்ப காலகட்டத்தில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது மிகச்சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து கதையின் நாயகனாக நடித்து வருபவர் நடிகர் சூரி
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான திரைப்படம் விடுதலை இப்படத்தில் தனது நடிப்பு திறமையை அழகாக வெளிப்படுத்தி அனைவராலும் ரசிக்கப்பட்டார்
இதனைத் தொடர்ந்து விரைவில் வெளியாக இருக்கும் விடுதலை 2ம் பாகத்தில் நடித்து முடித்திருக்கும் சூரி இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் நடித்து வருகிறார்
இந்நிலையில் மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் கருடன் ரிலீஸ் பற்றி கேட்டபோது விடுதலை 2 வெளியாவதற்கு முன்பாகவே கருடன் வெளியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.