தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது
நேற்று அமெரிக்காவில் நடைப்பெற்ற ப்ரோமோஷன்ல் பேசிய ஷங்கர் "எனது பாணியில் தனித்துவமான கதையுடன் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன்.
கடந்த மூன்று தசாப்தங்களாக நான் தெலுங்கு படம் எடுக்கவில்லை என்றாலும், தெலுங்கு பார்வையாளர்கள் எப்போதும் என் மீது பெரும் அன்பு செலுத்தினர். ராம் சரணுடன் தெலுங்கில் அறிமுகமாகியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என்று தெரிவித்தார்.