நியூசிலாந்தை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான பாரஸ்ட் அண்டு பர்ட, "பர்ட் ஆப் தி செஞ்சுரி" என்ற பெயரில் நூற்றாண்டின் பறவைக்கான போட்டியை நடத்தியது.
200 நாடுகளில் இருந்து பலர் பங்கு பெற்று 3.5 லட்சம் பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
இறுதியாக புயூட்கெடெக் (puteketeke) எனும் பறவை இந்த நூற்றாண்டிற்கான பறவை என தேர்வானது
புயூட்கெடெக் பறவையை, ஆஸ்திரலேசியன் க்ரெஸ்டட் க்ரீப் (Australasian crested grebe) என்றும் கிரேட் க்ரெஸ்டட் க்ரீப் என்றும் அழைக்கப்படுகிறது.
ஏரிகளில் காணப்படும் பறவை வகைகளை சேர்ந்த புயூட்கெடெக், உலகில் தற்போது 3 ஆயிரத்திற்கும் கீழே உள்ளது.
பதிவான வாக்குகளில் 2,90,374 வாக்குகளை பெற்ற புயூட்கெடெக், பிரவுன் கீவி (brown kiwi) பறவையை இரண்டாம் இடத்துக்கு தள்ளியது.
அரிதாகி வரும் இவ்வகை பறவைகளை காக்க பல தன்னார்வலர்கள் நியூசிலாந்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.