அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் புதிய படம் ராமம் ராகவம். இதன் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது
இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாலா பேசும் போது, "சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்
அவருடைய உழைப்பிற்கு நான் ரசிகன். கடுமையாக உழைக்கக்கூடியவர்." "மற்றவர்களுக்கு உதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும்
உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்," என்று தெரிவித்தார்.