இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1' படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளார்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த மாதம் 27-ந்தேதி இப்படம் வெளியானது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வெளியானாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், நவம்பர் மாதம் 8-ந்தேதி தேவரா படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.