இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதையடுத்து அஜித்தின் 63வது படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் வீரம் திரைப்படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.