இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது 25வது படமான கிங்ஸ்டன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மார்ச் 22 ஆம் தேதி இவரின் அடுத்த படமான "ரெபெல்" வெளியாக உள்ளது.
கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கபட்டுள்ளது. தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலரை இன்று நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், மார்ச் 22-ம் தேதி வெளியாகும் ரெபல் படத்தின் படக்குழு மற்றும் அன்புக்குரிய ஜி.வி. பிரகாஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.