நடிகர் தனுஷ் தற்போது தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன்,பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம் , சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ்
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1-ம் தேதி பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளதாகவும் இதில் இதுவரை தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களை அழைத்து கவுரவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.