கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திரைத்துறையை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ், " ஒரு படத்தின் பூஜைக்காக பத்திரிகை வைக்க கலைஞர் வீட்டிற்கு சென்றேன். அப்போது கலைஞர் கருணாநிதி என்னை 'வாங்க மன்மத ராசா' என அழைத்தார். நம்ம பாட்டை இவர் கேட்டிருக்காரான்னு ஆச்சரியமா இருந்தது."
கலைஞர் அவர்கள் மறைந்து விட்டார் என யாராவது பேசினால்தான் அவர் மறைந்து விட்டார் என மனதிற்குள் தோன்றுகின்றது," என தெரிவித்தார்.