நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
தனுஷ் இட்லி கடை திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் நியூஸ் 18 இந்தியா வழங்கும் கௌரவ விருதான அம்ரித் ரத்னா 2024 விருதை வென்றார் நடிகர் தனுஷ்.
இந்த விருதை தனுஷுக்கு விளையாட்டு வீராங்கனையான பிடி உஷா வழங்கினார்.