நிதி பற்றாக்குறையால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க மேலும் ரூ.40 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்ட நிலையில், முன்னணி தமிழ் நடிகர்கள் பலர் தாமாக முன்வந்து அதிகளவில் நிதி வழங்கி வருகின்றனர்
அந்த வகையில், கடந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சமும் நடிகர் நெப்போலியன் ரூ 1 கோடியும் நிதி வழங்கிய நிலையில், நடிகர் தனுஷ் தற்போது நிதி அளித்துள்ளார்
இதற்காக ரூ.1 கோடி நிதி அளித்த அவருக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.