மிதுன் சக்ரவர்த்தி இந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து, இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.
மிதுன் சக்ரவர்த்தி அவருடைய நடிப்பு திறமையாலும், திறனான நடிப்புக்காகவும் ஏராளமான பாராட்டுகளை பெற்றுள்ளார்.
தற்பொழுது மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்.8-ந்தேதி நடைபெறும் 70-வது தேசிய திரைப்பட விருது விழாவில் மிதுன் சக்ரவர்த்திக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.