நடிகர் அமிதாப் பச்சன், இந்தி சேனல் ஒன்றில், 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் 16-வது சீசன் இப்போது நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் முதல் கோடீஸ்வரரானார் 22 வயதான வாலிபர் ஒருவர்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 22 வயதான யுபிஎஸ்சி ஆர்வலரான சந்தர் பிரகாஷ் என்பவர் தான் க்ரோர்பதி 16 நிகழ்ச்சியில் கோடீஸ்வரரான முதல் போட்டியாளர் ஆவார்.
"எந்த நாட்டின் மிகப்பெரிய நகரம் அதன் தலைநகரம் அல்ல, ஆனால் அமைதியின் இருப்பிடம் என்று பொருள்படும் அரபுப் பெயரைக் கொண்ட துறைமுகம் எது?" என்ற ரூ.1 கோடி கேள்விக்கு தான்சானியா என சரியான பதிலை அளித்தார்.