நன்மைகளை அள்ளி தரும் கிரான்பெர்ரி

நன்மைகளை அள்ளி தரும் கிரான்பெர்ரி

Published on
கோடை காலத்தில் அதிகமாக விளையும் இந்த பழம், சுவை குறைவு என்றாலும் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குகிறது.
கிரான்பெர்ரியை சாப்பிடுவதால், வயிறு ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல், வாயுத்தொல்லை, அசிடிட்டி போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும்.
வயிற்றுபோக்கு போன்ற பிரச்சினையை நீக்கி, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கிரான்பெர்ரி ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பிற நோய்களின் வீரியத்தை குறைக்க உதவி புரிகிறது.
இதில் இரும்புச்சத்து உள்ளது. அது உடலில் ஏற்படும் ரத்த பற்றாக்குறையை ஈடுசெய்யும் தன்மையும் கொண்டது.
கிரான்பெர்ரியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் சோர்வின்றி செயல்பட முடியும்.
கிரான்பெர்ரியை சாப்பிடுவதால் உடல் எடையை குறைந்து கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
இதயம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com