லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள 'கூலி' படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது.
இப்படத்தில் பிரபலங்கள் பலரும் நடிக்க உள்ளனர். படப்பிடிப்பு தொடர்ச்சியாக 35 நாட்கள் நடைபெற உள்ளது
இந்நிலையில், 'கூலி' படத்தில் சினிமா ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் பணியாற்ற உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
மேலும் விரைவில் கூலி படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்