ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி."
படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாக்ராஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 1-ந்தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.