சின்னதிரையில் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நிகழ்ச்சி விஜய் டிவியின் குக் வித் கோமாளி
மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக அமைந்திருக்கும் இந்த நிகழ்ச்சி கடந்த 4 சீசன்களாக மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து
இதன் 5வது சீசன் நாளை முதல் ஔிபரப்பாகிறது. இதில் நடுவர்களாக சமையல் நிபுணர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் தாமு பங்கேற்க உள்ளனர்
இதில் குக்காக - இர்பான்,வசந்த் வசி, பிரியங்கா தேஷ்பாண்டே, நடிகர் விடிவி கணேஷ், சுஜிதா, ஷாலின் சோயா, அக்ஷய் கமல், ஸ்ரீகாந்த் தேவா, பூஜா வெங்கட் போன்ற பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.