தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரில் ஒருவர் ஓம் பிரகாஷ் இவர் இந்திய திரை உலகில் 15 வருடங்களாக பணியாற்றி வருகிறார்
தமிழில் களவாணி, நாணயம், அனேகன், மாரி, நீதானே என் பொன்வசந்தம், திருச்சிற்றம்பலம் போன்ற பல பிரபலமான படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே பாடல் மிகவும் ஹிட்டானது. பாடல் ஹிட்டாவதற்கு ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் ஒரு காரணம்.
இந்நிலையில் ஓம் பிரகாஷ் தனுஷை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் எனவும் இப்படத்தின் கதையை தனுஷ் எழுதுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.