இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் மார்பளவு சிலையை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி திறந்து வைத்தார்.
சென்னை ஐ.ஐ.டியை கொண்டு வருவதற்காக காரணமாக இருந்த காமராஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
'அனைவருக்கும் சென்னை ஐஐடி' என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.