தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.